search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹோன்டா கார்ஸ்"

    ஹோன்டா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.



    ஹோன்டா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் ஜாஸ் மாடல் இந்தியாவில் விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018 ஹோன்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் இம்மாத இறுதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹோன்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 2017 ஃபிரான்க்ஃபர்ட் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

    2018 ஹோன்டா ஜாஸ் மாடலில் சில காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்படுகிறது. இதில் புதிய வடிவமைப்பு கொண்ட முன்புறத்தில் கிரில் மற்றும் பம்ப்பர்களில் சில அப்டேட்கள் செய்ய்படுகிறது. ஜாஸ் மாடலில் 16-இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட இருக்கிறது. ஹோன்டா புதிய மாடலில் எல்இடி டேடைம் ரன்னிங் லைட்களை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    உள்புறம் 2018 ஜாஸ் மாடலில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய 2018 ஜாஸ் மாடலிலும் முந்தைய மாடல்களில் வழங்கப்பட்டதை போன்றே 1.2 மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது.

    இதன் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 110 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.5 லிட்டர் i-DTEC டீசல் இன்ஜின் 98 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த இன்ஜின்கில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் பெட்ரோல் வேரியன்ட்-இல் CVT ஆப்ஷன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் டீசல் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    ×